வியாழன், 11 செப்டம்பர், 2008

மதுவிலக்கு

சுயநலமோ, பொதுநலமோ, நீண்ட நாட்களாக தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி வலியுறித்தி வருகிறார் மருத்துவர்.ராமதாஸ். இந்த அரசியல் சவடால்களும், stunt-களும், நமக்கு பழகிப்போனவை. என் சமீபத்திய கோபத்துக்கு காரணம், மதுவிலக்கை ஏன் அமல்படுத்த முடியாது என்பதற்கு திரு.வீராசாமி கொடுத்திருக்கும் விளக்கம்:

"இங்கே பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால், அதன் மூலம் கிடைக்கும் வருவாய் அண்டை மாநிலங்களுக்கு, முக்கியமாக புதுச்சேரிக்கு சென்றுவிடும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் 6,500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்."

என்ன கொடுமை இது!! பலரின் வயிறையும், கல்லீரலையும் கெடுத்து, அந்த வருவாயில் ஒரு ரூபாய் அரிசி கொடுத்து, யார் வயிறை குளிர்விக்க போகிறார்கள்?

1 கருத்து:

திவ்யா சொன்னது…

மது விலகி அறிவித்தால் மட்டும் இவர்கள் திருந்துவார்களா ? திருடனை பார்த்து திருந்தி விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!!!!!!!