வியாழன், 18 செப்டம்பர், 2008

கதையும் காரணமும் - 2


ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் உயர் பதவி வகித்துவந்தார் ஒருவர். அவரின் கீழ் இருந்த பிரிவு நல்ல முறையில் செயல்பட்டு வந்த போதிலும் அவர் அமைதியின்றி இருந்தார். தனக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டார். எதற்கு எடுத்தாலும் எரிந்து விழுந்தார். அவருக்கு குடும்பத்திலும் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. இதுபோல் அவர் இதற்கு முன் நடந்துகொண்டதும் இல்லை. அதனால், ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு நாள் அவரிடமே கேட்டார்கள். அதற்கு அவர் தான் அணிந்திருந்த ஷூ-வை அவர்களிடம் காட்டி "எப்படி இருக்கிறது?" என்று கேட்டார். அது ஒரு பெயர்பெற்ற நிறுவனத்தின் மிகவும் விலை உயர்ந்த காலணி. ஊழியர்களும் "மிகவும் நன்றாக உள்ளது!", "தரமான வேலைப்பாடோடு உள்ளது", "அழகாகவும் இருக்கிறது" என்று அவர்கள் மனதில் பட்டதை சொன்னார்கள். அதற்கு அந்த அதிகாரி சொன்னார், "நீங்கள் சொன்னது அனைத்தும் சரி, ஆனால் இந்த ஷூ என் காலை கடிப்பது எனக்கு மட்டும் தான் தெரியும். இதனால் தான் நான் அமைதியின்றி இருக்கிறேன்".

நாம் பழகும் நபர்களும் இதுபோல் காரணமின்றி திடீரென்று நம் மீது கோபமாக, முரண்பாடாக நடந்துகொள்ளலாம். வெளியில் இருந்து பார்க்கும் போது அவரது வாழ்க்கை அமைதியாய் இருப்பது போல் தோன்றலாம். ஆனால் அவருடைய பிரச்சனை என்னவென்று நமக்கு தெரியாது அல்லவா? அதனால் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அடுத்தவரை புரிந்துகொள்ள முயல்வோம். பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுப்போம். Who knows, life may be pinching them.

1 கருத்து:

Sethu S சொன்னது…

புரிந்துகொள்ள முயல்வோம். பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுப்போம்