திங்கள், 8 செப்டம்பர், 2008

கிரிக்கெட்

Personal விஷயங்களை எதற்கு public ஆக்கவேண்டும்? சொல்கிறேன். இந்த தகவல்கள் என்னை பற்றி அறிந்தவர்களுக்காகவும் அறிய முனைகிரவர்களுக்காகவும். அதற்காக என் சுயசரிதையை இங்கே எழுதபோவதில்லை (அப்பாடா..! என்கிறீர்களா.) தொழில்பயற்சி கல்லூரியில் (polytechnic) தொடங்கி இதுவரையிலான என் வாழ்வில் நடந்த சில சுவாரசியங்களையும் சங்கடங்களையும் இங்க மேலோட்டமாக பகிர்ந்துகொள்கிறேன்.

தொழில்பயற்சி கல்லூரியில் முதலாமாண்டு பருவத்தேர்வில் (semester) முதல் மதிப்பெண் (சத்தியமாங்க..!) பெற்றது மாணவர் ஆசிரியர் மத்தியில் ஒரு அங்கீகாரத்தை அளித்தது. இது ஒரு வகையில் எனக்கு பிடித்த பெண்ணிடமான முதல் சந்திப்பை சுலபமாக்கியது . இந்த form-மை கடைசிவரை காப்பற்றினேன்.

இந்த காரணத்தினால் சில சலுகைகளை அனுபவித்தேன். அதில் முக்கியமானது செய்முறைத் தேர்வுகளில் செய்தாலும் செய்யாவிட்டாலும் (நான் செய்துவிடுவேன்) 99 மதிபெண்கள் பெற்றது. எங்களுக்கு மூன்று theories மூன்று practical papers. அதனால் இது என் சராசரியை (aggregate) உயர்த்த உதவியது. மற்றொன்று வகுப்புகளில் இல்லை என்றாலும் பெரிதாக கண்டுகொள்ளமாட்டர்கள். நான் கட்டடிததும் இல்லை. பெரும்பாலும் வகுப்புக்குள் இருப்பேன், பிற்பகல் 3-4 தவிர. அந்த சமயத்தில் தான், முட்டை போண்டாவின் அழைப்பை ஏற்று நானும், பிரகதீஸ்வரனும் சென்றுவிடுவோம். அதற்காக சில நாட்களில் சக தோழார்களிடம் நிதி வசூலித்ததும் உண்டு.

கல்லூரி வாழ்வின் மிக சுவாரசியமான நிகழ்ச்சி நாங்கள் கிரிக்கெட் விளையாடுவது (இதற்காக நான் ஒரு சில மதிபெண்களை செய்முறை தேர்வுகளில் இழக்க நேர்ந்தது). கல்லூரிக்குள் விளையாட அனுமதிகிடையாது அதனால் வெளியே அதுவும் ஐந்து கி. மீ. தொலைவில். இது நடந்தது எங்கள் கடைசி பருவத்தேர்வில். Project செய்வதற்காக வாரத்தில் இருமுறை மூன்று வகுப்புகள் ஒதுகப்பட்டன. மாலையில் இருந்தால் வீட்டிற்கு சென்று உண்டு உறங்கிவிடுவோம் என்று காலையில் வைத்து சதி செய்தார் HOD. இந்த சதிக்கு சளைக்காமல் அந்த மூன்று மணி நேரத்தை project பற்றி யோசித்து வீணாக்காமல் உருப்படியாக உடலை மேம்படுத்த கிரிக்கெட் விளையாட முடிவெடுத்தோம்.

அதற்கான இடத்தை தேர்வு செய்ய செய்யற்குழு கூட்டப்பட்டு சானடோரியம் சென்று விளையாடுவது என்று முடிவானது. அதற்கான சிற்றுந்து காலை 9.45க்கு வளாகத்திற்குள் வந்துவிடும். 9.40க்கு முதல் வகுப்பு முடிந்ததும் அதில் ஏறி மைதானத்திற்கு சென்றுவிடுவோம். ஒன்றாக சென்று, இரு அணிகளாக பிரிந்து, மோதுவோம். மொத்தம் மூன்று போட்டிகள். இதில் சிறப்பு அம்சம் யாதெனில் திரும்பிவர எந்த வாகனமும் கிடையாது. அதனால் நடந்து வருவோம். மாரத்தான் ஓட்டங்களும் சில நாட்களில் ஓடியதுண்டு. மூச்சிரைக்க ஓடிவந்து மதிய முதல் வகுப்பில் மதிய உணவை அரக்க பறக்க தின்றது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.

1 கருத்து:

RAGUPATHI சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.