செவ்வாய், 9 செப்டம்பர், 2008

தா..தா..தாளவாடி

நாங்கள் நண்பர்கள் அனைவரும் வருடத்திற்கு இருமுறை விடுமுறை நாட்களில் எங்காவது இரண்டு நாள் பயணமாக வெளியூர் செல்வது வழக்கம். கடந்த நான்கு வருடங்களாக இது நடைமுறையில் உள்ளது. எங்களது சமீபத்திய பயணம் தாளவாடி.

ஒவ்வொரு தடவையும் இவுங்கள சம்மதிக்க வெக்கரதுக்குல்ல போதும் போதும்னு ஆய்ரும். என்னமோ rising star ரித்தீஷ் படத்துக்கு முதல் ஷோக்கு கூப்ட மாதிரி ஓவரா சீன் போடுவானுக. ஒரு வழியா சமாதனப்படுத்தி ஒரு சனிக்கிழமை காலைல நான், Mc, 9.15, Law, கஜா எல்லோருமா கெளம்பினோம். தாளவாடி, பன்னாரி தாண்டி கர்நாடகா எல்லைல இருக்க சின்ன ஊர். அங்க நம்ம நண்பர் 9.15 க்கு தெரிஞ்சவங்களோட வீடு இருக்கு. எங்க இருக்கு? சுத்திவர எட்டு கி.மீ. அத்துவான காட்டுக்கு நடுவுல . ஒரு ஈ, காக்கா கிடையாது. ஆனா யானை, மான், சிறுத்தை (என் கண்ணுல படுல) நெறயா இருக்கும். நமக்கு தண்ணி தராதவன் விக்கற தண்ணிய குடிக்கக்கூடாதுங்கற காரணத்தால வழக்கம்போல போறப்பவே தமிழ்நாடு எல்லைல சரக்கு வாங்கிட்டோம். அங்க போய் சேந்ததும், காஞ்ச மாடு கம்புகாட்டுக்குள்ள பாஞ்ச மாதிரி கள்ளு கடைக்குள்ள புகுந்து மூக்கு முட்ட குடுச்சிட்டு, future use க்கு ஒரு ரெண்டு லிட்டர் வாங்கிட்டு வீடு வந்தோம்.

ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு சாயந்தரமா எந்திருச்சு கடைக்கு கெளம்பினோம். சரக்கு வாங்கவோ சைடு-டிஷ் வாங்கவோ இல்ல, சமையல் சாமான் வாங்கறதுக்கு. ஆமாங்க, அன்னைக்கு இவுனுகதான் சமையல் செஞ்சாங்க. (ஹீ.. ஹீ.. ஹீ... நம்ம பொறுப்பு சாப்படறது மட்டும் தான்.) சும்மா சொல்லகூடாது நல்லாவே இருந்துச்சு. மொடா குடியா குடுச்சிட்டு முடிஞ்ச மட்டும் சாப்டிட்டு, படுத்துட்டோம். இங்க இந்த வீட்ட பத்தி ஒரு விஷயம் சொல்லணுங்க. ஈ, காக்கா மட்டும் இல்ல மின்சாரமும் கிடையாது. எல்லோரும் ஆழ்துயிலில் இருக்கும் போது, நண்பர் Law திடீர்னு கத்துனாரு. என்னடானு முழுச்சு பாத்தா ஒண்ணும் தெரில. பக்கத்துல இருக்கறவன், ஏன், என் உள்ளங்கையே எனக்கு தெரில. ஆனா யாரோ கதவ தள்ளுற சத்தம் கேட்டுச்சு. எமன் தான் யான மேல வந்திருக்கான்னு முடிவு பண்ணி எல்லோரும் அவனவன் குலதெய்வத்த வேண்டிக்கிட்டு, பாவமன்னிப்பு கேட்டுகிட்டு அரண்டு போய் உக்காந்திருக்கப்ப, "ஏன்டா கத்தறீங்க? நான்தாண்டா ஒன்னுக்கு போகலாம்னு கதவ தெறந்தேன்"னு, கதவு பக்கதுல இருந்து MC சவுண்டு உட்டான். அப்பறம் என்ன? அவன் மட்டுமில்லாம நாங்க ஆறு பேரும் ஒருத்தன் பின்னாடி ஒருத்தன் சட்டைய பிடிச்சுக்கிட்டு ரயில் வண்டி மாதிரி ஒன்னா போய்ட்டு வந்து படுத்தோம்.

1 கருத்து:

Whale சொன்னது…

Super machi.. Nice to c u blogging.. Publish ur blog link to all.

Happy Blogging :-)

Regards,
Whale