வியாழன், 11 செப்டம்பர், 2008

தலைவர்கள் வாழ்க!!

இந்தியாவின் அமைதிப் பூங்கா எதுவென்றால்
இதுதான் என்று சொல்லிவிடலாம்
தமிழ்நாட்டை!

இந்த அசாத்தியத்தை
சாத்தியம் ஆக்கியிருக்கிறார்கள்
எம் தலைவர்கள்.

இயற்கைக்கும் வாய்ப்பு கொடோம் - தீய
இயக்கங்களுக்கும் வாய்ப்பு கொடோம்

எம் ரத்தத்தின் ரத்தங்களின்
ரத்தங்களை உறுஞ்சும் உரிமை

குடும்பக் கண்மணிகளுக்கும்
கழகக் கண்மணிகளுக்கும் மட்டும் தான்.

அந்நியர் வந்து அழிச்செயல் செய்ய
அரியணையில் நாங்கள் எதற்கு?

ஆட்சி மாறி மாறி வந்தாலும்
காட்சிகள் மாறது.

தலைவர்கள் வாழ்க!!

1 கருத்து:

திவ்யா சொன்னது…

காட்சிகளும் கட்சிகளும் என்றும் மாறவே மாறாது !!!!!நண்பரே !!!