திங்கள், 15 செப்டம்பர், 2008

முயற்சியுடைமை

"என் வெற்றிக்குக் காரணம் 99% அதிர்ஷ்டம் 1% திறமை" - அபினவ் பிந்த்ரா தன் வெற்றிக்குப்பின் சொன்னது. அவரது வெற்றியை இந்தியா கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும், உண்மையை கூரியதற்காக அவரை பாராட்டுகிறேன்.

தன் வெற்றிக்கும் தான் இந்த நிலைமைக்கு வந்ததற்கும் காரணம் உழைப்பும், விடாமுயற்சயும் மட்டும்தான் என்று பெரும் தொழில்அதிபர்களும், பணக்காரர்களும் சொல்ல கேட்டிருக்கிறோம் அல்லது அவ்வாறு பத்திரிக்கைகளிலும் புத்தகங்களிலும் படித்திருக்கிறோம். அப்படியென்றால், அவர்களைவிட திறமையானவர்கள் இவ்வுலகத்தில் இல்லையா? இல்லை அவர்கள் மட்டும் தான் உழைக்கிறார்களா? நிச்சயமாக இரண்டுமே இல்லை. இதற்கு உங்கள் வாழ்விலும் என் வாழ்விலும் நிறைய உதாரணங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, நமக்கு கீழ் பணிபுரிபவர்கள் நம்மைவிட திறமையானவர்களாக இருக்கலாம் நமக்கு மேல் பணிபுரிபவர்கள் நம்மைவிட குறைதிறன் உள்ளவர்களாக இருக்கலாம்.

ஏன் இந்த முரண்பாடு? உழைப்பால் உயர்ந்தவர் இல்லையா? இருக்கிறார்கள். முயற்சியால் மட்டும் எதையும் அடைந்தவர் இல்லை. நமக்கான பாதை ஏற்கனவே போடப்பட்டு இருக்கிறது. அதில் நாம் பயணிக்கிறோம். அதில் நம் தகுதிக்கு அதிகமாக ஏதும் அடைய முடியாது தகுதிக்கு குறைவாகவும் ஏதும் கிடைக்காது. சரியான சமையத்தில் சரியான முடிவு எடுப்பவர் எவரும் இல்லை. அவர்கள் எடுக்கும் முடிவு சரியானதாக அமைந்துவிடுகிறது. அவ்வளவே. Very often the mother of success is Lady Luck.

கருத்துகள் இல்லை: