திங்கள், 8 செப்டம்பர், 2008

கதையும் காரணமும் - 1


தன் ஊரில் இருந்து வேறு ஒரு ஊர் நோக்கி சென்றுகொண்டிருந்தான் ஒரு வழிப்போக்கன். மதிய நேரம் ஆகியதால் பசியாறி களைப்பாற ஓர் ஆலமர நிழலில் அமர்ந்தான். உண்பதற்கு இலை தேடியவனின் கண்களுக்கு பக்கத்தில் இருந்த பூசணிக் கொடி கண்ணில் பட்டது. அதன் இலை ஒன்றில் வைத்து தன் உணவை முடித்தபின் ஆலமரத்தின் நிழலில் படுத்தவனுக்கு திடீர் என்று ஒரு கேள்வி எழுந்தது.

இவ்வளவு பெரிய மரத்திற்கு சிறிய காய்களும், நேர்நோக்கிகூட வளரமுடியாத பூசணிக் கொடிக்கு அவ்வளவு பெரிய காய்களும் கொடுத்த இறைவனின் செய்கையை ஏளனம் செய்தான். பெரிய மரத்திற்கு பெரிய காய்களும் சின்ன கொடிக்கு சின்ன காய்களும் கொடுத்திருக்க வேண்டும் என்பது அவன் நினைப்பு. இவ்வாறு நினைத்தவாறே உறக்கத்தில் ஆழ்ந்தான். திடீர் என்று தன் தலையில் ஏதோ விழுந்ததை உணர்ந்து திடுகிட்டு எழுந்தவனுக்கு தன் தலையில் விழுந்தது ஆலம்பழம் என்பது புரிந்தது. ஒரு வேளை அவன் நினைத்தது போல ஆலமரத்தில் பூசினிக்காய் இருந்து அது தன் தலையில் விழுந்திருந்தால்? அபோதுதான் அவனுக்கு புரிந்தது இறைவனின் ஒவ்வொரு செயலிலும் ஒரு அர்த்தம் உண்டு என்று.

இந்த கதையை எப்போதோ படித்த ஞாபகம். எனக்கு மிகவும் பிடித்த கதை. கடந்தகால நிகழ்ச்சிகளை எண்ணிப்பார்த்தால் அனைத்தும் ஒரு கோர்வையாய் நடந்திருப்பது புரியும். நீங்களும் நடந்து முடிந்த முக்கியமான சில தருணங்களை எண்ணிப்பாருங்கள் நான் சொல்வது உண்மை என்று புரியும். ஆதலால் தேவையற்ற கவலைகளை தூக்கி எறிவோம். அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் சொன்னது போல் "God does not play dice".கருத்துகள் இல்லை: