வியாழன், 13 நவம்பர், 2008

கதையும் காரணமும்-4

ஆற்றங்கரை ஓரமாக வந்து கொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது. அது வைரம் என்று அறியாமல், விலைபோகுமா என்ற சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு வந்தான். அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன், இருபது ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான். ஆனால் வழிபோக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான். ஐந்து ரூபாய் அதிகம் கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20 ரூபாய்க்கு பேரம் பேசினான். இதை கவனித்த மற்றொரு வியாபாரி 25 கொடுத்து அந்த வைரைத்தை வாங்கிக் கொண்டு சென்றான்.

ஆத்திரமடைந்த வியாபாரி அந்த வழிப்போக்கனை பார்த்து "அட முட்டாளே! அதன் மதிப்பு பல ஆயிரம் பெரும். அறிவில்லாமல் விற்றுவிட்டாயே!" என்று திட்டினான்.

அதற்கு அவன் சொன்னான் "என்னைப் பொருத்தவரை அதன் மதிப்பு அவ்வளவுதான். ஆனால் அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் முட்டாள்".

கருத்துகள் இல்லை: