திங்கள், 12 ஜனவரி, 2009

பொங்கல்

பொங்கல், தமிழர் திருநாள், உழவர் திருநாள், தைத் திருநாள். ஆதவனுக்கும் வருடம் முழுதும் உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் திருநாள். ஆனால் தமிழையும் உழவர்களையும் மதிக்காத நாம் ஏன் கொண்டாடுகிறோம்? நாம் எங்கு கொண்டாடுகிறோம்? நம்மை பொறுத்தவரை பொங்கல் என்பது இரண்டு நாள் விடுமுறை. வேறு எந்த பண்டிகைக்கும் இல்லாத சிறப்பு. அவ்வளவே.

விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறிக் கொண்டிருக்கிறது. சோறு படைப்பவனுக்கு சோறில்லை. உயிரைக் குடிக்கும் சாராயம் தயாரிப்பவனுக்கு கூட விலை நிர்ணயிக்கும் உரிமை உண்டு. ஆனால் வயிற்றுக்கு உணவு இடுபவனுக்கு அந்த உரிமை இல்லை. சொல்லில் அடங்காக் கேவலம் இது. இந்தியா விவசாய நாடு, 65% மக்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழ் நம் தாய் மொழி. புலி என்பதைக் குறிக்க மட்டும் தமிழில் 12 வார்த்தைகள் உண்டு! ஆனால் இன்றோ அடிபட்டால் கூட "ஐயோ! அம்மா!" என்று கத்துவது " ! ஷிட்!" என்று மாறிப் போனது. அருமையான மாற்று வார்த்தை! தனிப்பட்ட வார்த்தைகளும், உச்சரிப்புகளும், இல்லக்கியங்களும் கொண்டது நம் மொழி. வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு இது. அகவே தான் செம்மொழி.

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு".


இன்று தமிழே மங்கி விட்டது!! அதை மீண்டும் சுடர் விட செய்வது நம் கடமை. (மின் அஞ்சல், ஆர்க்குட் கணக்குகளை தமிழில் வைப்பதில் இருந்து தொடங்குவோம்.)

2 கருத்துகள்:

திகழ்மிளிர் சொன்னது…

இனிய பொங்கல் மற்றும்
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

mohan சொன்னது…

enna pannrathu gobi one day this world will know about farmer