புதன், 18 பிப்ரவரி, 2009

கதையும் காரணமும் - 7

புதிதாகக் கட்டிக்கொண்டிருந்த கோயிலுக்கு வந்த ஒருவர் அதன் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். அப்போது ஒரு ஸ்தபதி சிலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அருகில் சென்று பார்த்தார். அப்போது அதே போன்ற ஒரு சிலை அருகில் இருப்பதை கவனித்த அவர் ஸ்தபதியிடம் "எதற்கு ஒரே மாதிரி இரண்டு சிலைகளை உருவாக்குகிறீர்கள்?" என வினவினார். "ஏற்கனவே செய்த சிலையின் மூக்கில் சிறிது பழுது ஏற்பட்டு விட்டது. அதனால் தான் வேறு ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்" என்றார்.
அதற்கு அவர் "இந்த சிலையை எங்கு வைக்கப் போகிறீர்கள்?" என்று கேட்டார். "அதோ அந்த தூணின் மேல்" என்று ஒரு இருபது அடி உயரத் தூணைக் காட்டினர். "அந்த உயரத்தில் இருக்கும் போது இந்தக் குறை யாருக்கும் தெரியாது" என்றார் வந்தவர். "ஆனால் எனக்குத் தெரியும்" என்றார் ஸ்தபதி.

சிறப்பான செயல்கள் அனைத்துமே நம்முள் இருந்து தான் துவங்குகின்றன. நம்மை நாம் விஞ்சுவதே மேம்பாட்டிற்கான வழி.

கருத்துகள் இல்லை: