வியாழன், 19 மார்ச், 2009

பெண்

ஓர் உடல் ஈருயிராய் இருந்த அன்னையைவிட்டு
பூமித்தாயின் மடியில் சாய்ந்தாய்

பாடப் பழகும் குயிலாய்
பறக்கப் பழகும் கிளியாய்
இவ்வின்பம் எத்தனை காலம் என்று தெரியாமல்
இன்ப வானைத் தொட சிறகை விரிப்பாய்.

சில தூரம் பறக்கும் முன்
அவளைச் சுற்றித் தென்னைக் கூண்டு.

கூண்டை விட்டு வெளிவந்ததும்
வேறொருவனால் சிறகொடிக்கப் பட்டு
குடும்பக் கூட்டில் தள்ளப் படுவாய்.

இத்துன்பங்கள் போதாதென்று
உண்ணும் உணவிற்கும்
உள்ளொன்று பங்கு கேட்கும்.

அவ்வுயிரை ஈனுவதற்குள்
அவள் செத்துப் பிழைப்பாள்.

பரிவோடு அவ்வுயிரைக் காணும்போது
கண்களில் நீர்..
காரணம்...
அவளும் பெண்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

true ghaan :-)