புதன், 25 மார்ச், 2009

சஞ்சய் தன் வேலைகளை முடித்துவிட்டு காரில் ஏறி வீடு நோக்கி சென்று கொண்டிருந்தான். பொன் மாலைப் பொழுதை ரசித்தவாறே இயற்கையின் ஏகாந்தத்தை வேடிக்கை பார்த்தவாறே காரை செலுத்திக் கொண்டிருந்தவனின் கண்களில் அக்காட்சி பட்டது.

ஒருவன் சாலை ஓரத்தில் அமர்ந்து அங்கே முளைத்துக் கிடந்த புற்களை பிடிங்கி தின்று கொண்டிருந்தான். இதைக்கண்டு திடுக்கிட்டவன் வண்டியை நிறுத்திவிட்டு அவனிடம் சென்று "ஏன் இப்படி புல்லை தின்று கொண்டிருக்கிறாய்" என்று அக்கறையுடன் கேட்டான். "சிற்றுண்டி வாங்கி உண்ணும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை" என்றான் அவன். இதைக் கேட்டு மனம் நெகிழ்ந்த சஞ்சய் "சரி என்னுடன் வா" என்று அழைத்தான்.
"ஐயா என்னுடன் என் மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள்" என்றான் அவன்.
"அவர்களையும் அழைத்து வா" என்றான்.

அனைவரயும் சுமந்து கொண்டு அவன் வீடு நோக்கி கார் விரைந்து கொண்டிருக்கையில் "அய்யா இவ்வளவு கனிவு கொண்ட நீங்கள் தெய்வம் போல்" என்று புகழ்ந்தாள் அவனின் மனைவி.

"பரவாயில்லை.. என் வீட்டில் புல் வெட்டி பல நாட்கள் ஆகிவிட்டது" என்றான் சஞ்சய்.

கருத்துகள் இல்லை: