ஞாயிறு, 10 மே, 2009

விளக்கம்.

ஊட்டி பயணத்தைப் பற்றி நான் ஆங்கிலத்தில் எழுதியதற்கு சில எதிர்ப்புக் குரல்கள். என் ஆங்கிலம் அவ்வளவு மட்டமா இல்ல என் தமிழ் அவ்வளவு நல்லா இருக்கானு புரில. எதுவாகினும் இதோ என் விளக்கம்: எனக்காகவோ இல்லை என்னைப்பற்றி எழுதவோ இந்த வலைப்பூவை நான் தொடங்கவில்லை. எங்கேனும் ஒருவர் இதை படித்தாலும் அவருக்கு கொஞ்சமேனும் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்பது தான் நான் எழுதுவதின் நோக்கம் (எதிர்காலத்தில் எழுத்தாளனாக ஆவதற்கு ஒரு வெள்ளோட்டமும் கூட). அதனால் என் பயணத்தின் போது நான் ரசித்த இடங்களை மற்றவர்களும் பார்க்கட்டும் என்பதற்காகவே பொதுவான மொழியில் எழுதினேன். மற்றபடி இந்த வலைப்பூ தமிழில்தான் பூக்கும்.

1 கருத்து:

திவ்யா சொன்னது…

தமிழ் மேல் உள்ள காதல் தான் எதிர்ப்புக்கு காரணம்.......
அதை எதிர்ப்பு என்று எடுத்து கொள்வதற்கு பதிலாக எங்கள் எண்ணம் என்று எடுத்து கொள்ளுங்கள்