செவ்வாய், 12 மே, 2009

இரு தவளைகள்

ஒரு காட்டு வழியே தவளைக் கூட்டம் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு குழிக்குள் இரண்டு தவளைகள் விழுந்து விட்டன. ஓடி வந்து பார்த்த மற்ற தவளைகள் குழி மிகவும் அழமாக இருப்பதைக் கண்டு "உங்களால் மேலே வர முடியாது. சாகத் தான் போகிறீர்கள்" என்றன. இருந்தும் விழுந்த இரண்டு தவளைகளும் குதித்து குதித்து முயற்சி செய்தன. ஆனால் அவைகளால் மேலே வர முடியவில்லை. "தேவையில்லாமல் உங்களை நீங்களே வருத்திக் கொள்ளாதீர்கள். உங்களால் நிச்சயம் மேலே வர முடியாது. அமைதியாக இறந்துபோங்கள்" என்று திரும்பத் திரும்ப கேலி பேசின. இதைக் கேட்டுக் கொண்டே இருந்த ஒரு தவளை 'நம்மால் மேலே போக முடியாது' என்று எண்ணி சற்று நேரத்தில் பலவீனம் அடைந்து குத்திப்பதை நிறுத்திவிட்டு இறந்து போயிற்று.

விடாமல் குதித்துக் கொண்டிருந்த மற்றொரு தவளை மேலே வந்துவிட்டது. இதைப் பார்த்த மற்ற தவளைகளுக்கு ஆச்சர்யம். பிறகு தான் தெரிந்தது அந்தத் தவளை செவிடு என்றும், இவ்வளவு நேரம் மற்ற தவளைகளெல்லாம் 'மேலே வரமுடியும்' என்று தன்னை உற்சாகப் படுத்தியதாகவும் நினைத்துக்கொண்டது என்றும்.

எப்போதும்
பாசிடிவாக பேசுங்கள். எதிர்மறையான சிந்தனையுடவர்களை அருகில் வைத்துக்கொள்ளதீர்கள்.

2 கருத்துகள்:

திவ்யா சொன்னது…

நல்ல கதை

A Living Creature சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.