வெள்ளி, 5 ஜூன், 2009

மகனே!

விந்தின் விதையே
விதையின் வித்தே.!

உடல் சேர்க்கையால்
உயிர் பெற்ற உடலே
உடல் பெற்ற உயிரே.!

என் பிரதியின் பாதியே
பிரபஞ்சப் பொருள்களின் பங்கே.!

என் பிறப்பின் கடமையே
என் நிரந்தரத்தின் நிழலே
என் உயிரே
உறவே
மகனே.!

கருத்துகள் இல்லை: