சனி, 13 பிப்ரவரி, 2010

அழைப்பு

கல்யாணம் என்பது
காடுகளில் திரிந்த மனிதனின்
காட்டுமிராண்டித்தனத்தின் மிச்சம்
என்று சொன்னால் ஒப்புக்கொள்வாயா?

கண்ணியம் என்னும் போர்வையை விலக்கி
காதலின் நிர்வாணம் காண்போம் வா
என்று அழைத்தால் ஏற்பாயா?

அற்ப சுகம் என்றெண்ணி
அற்பமாய் என்னைப் பார்க்காதே
வள்ளுவனும் ஆண்டாளும்
வாத்ஸ்யாயநாறும் கண்ணனும் சொல்லியதன்றி
தவறாய் நானேதும் சொல்லவில்லை.

என் மயிர் நெஞ்சில்
உன் மலர் முகம் புதைத்து
என் இதையத்தின் ஓசை கேள்.

இதழ் மேல் இதழ் பதித்து
நம் அந்தரங்கங்கள் பேசுவோம்.

உன் மடியில் விழுந்து
நான் அழும்போது
தலை கோதி தட்டிக் கொடுத்து
ஆறுதல் சொல்.

உள்ளங்கையில் உன் முகமேந்தி
கொள்ளை கொள்ளும் கண்கள் பார்த்து
ஓர் இரவில் ஆயிரம் கவிதைகள் படிப்பேன்
வார்த்தையின் உதவியின்றி.

நமக்கென்று ஓர் உலகத்தை சிரிஷ்டிப்போம்
அதில்
கசக்கும்வரை கலவி கொள்வோம்
காலம் உள்ளவரை காதல் கொள்வோம் வா
என்று அழைத்தல்
ஏற்பாயா?