வெள்ளி, 2 ஏப்ரல், 2010

உன் உழைப்பென்று எதை சொல்வாய் மனிதா?
உன் திறமையென்று ஒன்றுண்டோ மனிதா?
நேரமது கூடி வந்தால் நிலையது மாறிவிடும்
நீ இருக்கும் இடம் தேடி சகலமும் ஓடிவரும்.

ஊர் கூடி வாழ்த்துமொரு வேளையும் வருவதுண்டு
நினைத்ததெல்லாம் உன் கண்முன்னே நடப்பதுமுண்டு.
பொல்லா பகைவரும் புறம் பேசி தூற்றியோரும்
சிவிகையிலே உன்னை சுமந்துசென்று
சிங்காசனத்தில் ஏற்றி வைக்கும் காலமும் வருவதுண்டு.

விதியது மாறிவிட்டால் பட்ட காலிலேயே படும்
வாசல் தேடி வேதனைகளே வந்து நிற்கும்.
ஓடி ஓடி சேர்த்த செல்வங்களும்
தேடிவந்து சேர்ந்து கொண்ட சொந்தங்களும்
நீரில் கரைந்த உப்பாய் காணமல் போகும்.

உறங்கும் உடல் கூட பிணம் தான்
சாவின் வாசல் வரை சென்று வரும் சவம் தான்.
ஏமாற்றங்களின் மூட்டையாய் இறந்தகாலம்
எதிர்பார்புகளின் பட்டியலாய் எதிர்காலம்
இவற்றுள் நழுவிப்போகும் நிகழ்காலம்.

இன்று நேற்றாகிப் போகும் நாளை
உனக்கும் வரும் நல்ல வேளை
வராமல் போனால் இல்லை கவலை
வாழ்க்கை இங்கே யாருக்கும் நிரந்தரமில்லை.

கருத்துகள் இல்லை: