ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

தலைப்பு ஒரு கேடா?!!

உற்றதோர் உறவு என்றெண்ணி
உள்நெஞ்சில் சிறை வைத்தேன்
நல்விதியால் வாய்க்கப்பெற்ற
அருஞ்செல்வம் என்றெண்ணி
அகத்தில் கொலுவைத்துக் கொண்டாடினேன்.

என் வாழ்வின்
அழகிய சித்திரம் என்றெண்ணி
கவிதைக்குள் வைத்து சிலாகித்தேன்
சிந்தையில் வைத்து நிந்தித்தேன்.

அழைப்பதற்கு பெயரில்லா
அழகிய உறவு
அரிய புரிதலுடன் கூடிய
அற்புத உறவு என்றெண்ணி
ஆனந்தக் கூத்தாடினேன்.

கொட்டப்பட்ட அன்பு
கொதிநீராய் சுட்டது
பொழியப்பட்ட பாசம்
பாதத் தூசாய் போனது.

உதிரம் கொட்டக் கொட்ட
உறுப்பு ஒன்றை அரிந்த வலி
உவமையாகாது
அகத்தில் இருந்ததை
கிள்ளி எறிந்த வலி.

எதிர்பார்புகளுடன் சுழலும் உலகில்
உண்மை அன்பிற்கு வேலையில்லை
நல்வேடமிட்டு காரியம் சாதிக்கும்
துப்பும் எனக்கில்லை.

உணவு தவிர்த்த வயிறும்
உறக்கம் தொலைத்த கண்களும்
தெரியாமலேயே போய்விடுகிறது
அதன் காரணகர்த்தாக்களுக்கு.

தேடித் திரியும் உறவின்முன்
தேவையின்றிப் போய்விடுகிறது
தேடிவந்த எதுவும்.

உண்மையான அன்பு உணரப்படுவதுமில்லை
உரிய இடம் போய் சேர்வதுமில்லை
உதாசீனம் செய்தவர் அந்த
இழப்பை உணர்வதும் இல்லை.

இருகை ஓசை
ஒருகை ஆசை
ஆயா சுட்ட தோசை

அடப்போங்கடா..!!!
எழுதி மயிராச்சு.....!!!!!

கருத்துகள் இல்லை: