ஞாயிறு, 15 ஜூலை, 2012

எச்சரிக்கை

காறியுமிழ கையேந்தி நின்றது போதும்
சுரணையும் வீரமும் இன்னும் மிச்சமுண்டு எம்மிடம்.
காலடியில் கிடப்பதால் எச்சமென்று நினைத்தீர்
கணுக்காலை வெட்டினால் பிடரியில் உயிர்வலிக்கும் மறவாதே.
இற்றுக் கிழிந்துவிட்டது இந்திய முகமூடி
இனியும் செல்லாது இறையாண்மை மாயை
தனிநாடே இதற்கு விடிவு 
துண்டாடடுவதே எங்கள் முடிவு.
என் வீடு தமிழ்நாடு.
என் விலாசம் தமிழ்நாடு.
என் தேசம் தமிழ்நாடு.

கருத்துகள் இல்லை: