புதன், 24 ஜூன், 2015

என்னவள்

ஆயிரம் மாற்றுப் பொன்னவள்
அதிசயமான பெண்ணவள்
அன்பு செய்வதிலே அன்னையவள்
கொஞ்சிப் பேசும் கிள்ளையவள்.

கண்ணுக்குள் வைத்தே
காத்திடுவாள்-உள்ளங்
கைக்குள் வைத்தே
தாங்கிடுவாள்.

வட்டக்கருவிழியாலே
கவிதைகள் சொல்லிடுவாள்
மழலை மொழியாலே
மகிழச் செய்திடுவாள்.

வானே வியக்குமளவு
காதல் மழை பொழிந்திடுவாள்.
நிலமே வெட்குமளவு
பொறுமை காத்திடுவாள்.

மன்னிப்பதில்
கடவுளை விஞ்சிடுவாள்.
கோபம் என்றால் என்னவென்று
கேட்டிடுவாள்.

தன் சோகத்தை
தன்னுள்ளே வைத்திடுவாள்.
துன்பம் நமெக்கெனில்
துடியாய்த் துடித்திடுவாள்.

உறவுக்காக
தன் தேவைகளை உதிர்த்திடுவாள்.
துறவி போல்
தன்னையே தொலைத்திடுவாள்.

இப்புவியின் இன்பங்கள்
அத்தனையும் பெற்றிடுவாள்.
துன்பம் துளியுமின்றி
வாழ்வாங்கு வாழ்ந்திடுவாள்.